Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2017

சாமி ஓம்மிற்கு தர்ம அடி..... காந்தியை படு கொலை செய்த நாதுராம் கோட்சேயின் பிறந்த நாள் விழாவில் - வீடியோ


சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!

டெல்லியில் சாமி ஓம்மிற்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெல்லியில் உள்ள விகாஸ் நகரில்RSS அமைப்பின் சார்பாக   காந்தியை படு கொலை செய்த  நாதுராம் கோட்சேயின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு சாமி ஓம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். சாமி ஓம் ஏற்கனவே பெண்களை இழிவாக பேசுபவர். தொலைக்காட்சிகளில் பெண்களை இழிவாக பேசி அடிவாங்கியவர். இப்படி இருக்கையில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சாமி ஓம் வந்ததுமே கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

பல்வேறு பொது தளங்களில் பெண்களை அவமதிக்கும் சாமி ஓம்மை எப்படி அழைக்கலாம் என பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், பிரச்சனை தொடங்கியது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். விழா மேடையில் ஏறி பேசுவதற்கு சாமி ஓம் சென்றார். அப்போது அங்கிருந்த ஒருவர் சாமி ஓம்மை பிடித்து, நைய்ய புடைத்தார். உடன் இருந்தவர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் சிலர் அவரை தாக்கினர். அப்போது சினிமாவில் போலி சாமியார்கள் விக்குடன் காட்சி அளிப்பதுபோன்று, சாமி ஓம்மின் விக்கும் கழண்டுவிட்டது. இதனையடுத்து அவர் தாக்கப்படுவதை தடுத்தவர்களும் சேர்ந்துக் கொண்டு தர்ம அடி கொடுத்தனர். அடி தாங்க முடியாத சாமியார் விக்குடன் ஓட்டம் பிடித்தார். பின்னர் அவரை விழா ஏற்பாட்டாளர்கள் காப்பாற்றி காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

 இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தன்னை சாமியார் என கூறிக்கொள்ளும் சாமி ஓம் இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறை கிடையாது. தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றி சர்ச்சையுடன் பேசி அடி வாங்கி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது இந்தி நடிகர் சல்மான் கானை இவர் வசைபாடியது பெரும் சர்ச்சையாகியது. அந்த நிகழ்ச்சியிலும் அடிவாங்கினார். தாடியுடன் திரியும் சாமி ஓம், இவ்வளவு நாளும் விக் வைத்துதான் மக்களை ஏமாற்றி உள்ளார் என்பது இப்போது தெரியவந்து உள்ளது.
நன்றி: தின தந்தி - 22.05.2017

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.