May 8, 2017
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆப்கன் தலைவர் பலியானதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்தது
ஆப்கானிஸ்தான் பகுதியில் கணிசமான மாவட்டங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க, புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிக்க அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை பயன்படுத்த ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி கடந்த ஏப்ரலில் முதல் முறையாக, அணு அல்லாத மிகப்பெரிய குண்டை பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை குறி வைத்து விமானம் மூலம் அமெரிக்க ராணுவம் வீசியது.
இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலின் போது ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ் இயக்கத்தின் ஒரு பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே என்ற அமைப்பின் தலைவர் அப்துல் ஹாசீப் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஹாசீப் பலியானதை கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி ஆப்கான் அரசு உறுதி செய்தது.
இந்த நிலையில், அப்துல் ஹசீப் குண்டு வெடிப்பில் பலியான தகவலை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்துள்ளது. அப்துல் ஹசீப் கொல்லப்பட்டது ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டிற்குள் ஐ.எஸ் இயக்கத்தினரை ஆப்கனில் ஒழிப்போம் என்ற இலக்கு சாத்தியப்படும் என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரும் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆப்கன் தலைவர் பலியானதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்தது
Reviewed by மறத்தமிழன்
on
May 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.