May 1, 2017
லண்டனில் ஓட்டலில் இருந்து பிரியாணி வாசனை வந்ததால் இந்தியருக்கு அபராதம்
லண்டன்: ஓட்டலில் இருந்து பிரியாணி வாசனை வெளியே வருவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், லண்டனில் ஓட்டல் உரிமையாளர்களான இந்தியர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்பிராக் பகுதியைச் சேர்ந்தவர்கள் சபானா, முகமது குஷி தம்பதியர்கள். இந்தியர்களான இவர்கள் லிந்தார்பி பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர். இதில் பஞ்சாபி உணவு வகைகள் மற்றும் பிரியாணி, பஜ்ஜி உள்ளிட்டவையும் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில், உணவகத்தில் இருந்து பிரியாணி வாசனை மிகவும் அதிகமாக வருவதாக புகார் எழுந்தது. இதனால் தங்களது துணிகளை துவைத்தால் தான், இந்த வாசனை செல்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கிரிஸ்டினா ஹாரிசன், உணவக உரிமையாளர்களான சோபானா, முகமது குஷி ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இருவரும் வழக்கு செலவாக தலா ரூ.40 ஆயிரத்தை அபாராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. திக்கப்பட்டோருக்கான கூடுதல் கட்டணமாக ரூ.2500 செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதே நேரத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வர்த்தகர்கள் சிலர் உணவகத்தில் இருந்து வரும் வாசனையால் எந்த பிரச்னையும் இல்லை என்று நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
லண்டனில் ஓட்டலில் இருந்து பிரியாணி வாசனை வந்ததால் இந்தியருக்கு அபராதம்
Reviewed by மறத்தமிழன்
on
May 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.