May 11, 2017
வாலிபர் படுகொலை, தலையை போலீஸ் நிலையத்தில் வீசி சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
பாகூர் ஏரிக் கரையில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். துண்டித்த அவரது தலையை போலீஸ் நிலையத்தில் மர்ம கும்பல் வீசி சென்றது.
பாகூர் ஏரிக் கரையில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். துண்டித்த அவரது தலையை போலீஸ் நிலையத்தில் மர்ம கும்பல் வீசி சென்றது. மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வாலிபர் படுகொலை
புதுச்சேரி மாநிலம் பாகூரை அடுத்த குடியிருப்பு பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய இளைய மகன் சுவேதன் (வயது18). வேலைக்கு எதுவும் செல்லவில்லை.
இவர் பாகூர் ஏரிக்கரை குடியிருப்பு பகுதியில் உள்ள காலிமனைக்கு நேற்று இரவு சென்றார். அப்போது அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சூழ்ந்து கொண்டு படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். அந்த நபர்கள் சுவேதனின் தலையை ஒரு பையில் எடுத்துவைத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
ஏரிக்கரை பகுதியில் சுவேதனின் உடல் முண்டமான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. சுவேதனின் உடலில் கைகள், கால், இடுப்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டுகாயம் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பாகூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் நிலையத்தில் தலை வீச்சு
இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன், தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம், பாகூர் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
வாலிபரின் உடல் தலை இல்லாமல் முண்டமாக கிடந்ததால் தலை எங்கே? என போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழகப்பகுதியான கடலூர் ரெட்டிச்சாவடியில் உள்ள போலீஸ் நிலைய வாசலில் துண்டிக்கப்பட்ட சுவேதனின் தலையை வீசிவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்றிருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ஏரிக்கரை பகுதியில் உள்ள சுவேதனின் உடலையும், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் வீசப்பட்ட தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
விசாரணை
சுவேதனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளையும் தேடி வருகிறார்கள்.
வாலிபர் படுகொலை, தலையை போலீஸ் நிலையத்தில் வீசி சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.