Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2017

இலங்கையில் பெரு மழை, வெள்ளம்.. மீட்பு பணிக்கு விரைகிறது இந்திய கப்பல்கள்


இலங்கையில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து மீட்பு பணிக்காக இந்தியா தனது கப்பல்களை அனுப்பி வைக்கிறது.

இலங்கையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதுவரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏறத்தாழ 92 பேர் உயிரிழந்த்துள்ளனர். மேலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 110 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் மழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும், முதல் கப்பல் இன்று காலையும் இன்னொரு கப்பல் நாளையும் புறப்படும் என்றும் அவர் டிவிட்டரில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.