Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

டுவிட்டரில் கடும் மோதல்: நடிகை குஷ்பு ஆவேசம்; “என்னை கூத்தாடி என்பதா?” அப்போ ஆட தெரியாத?


டுவிட்டரில் தன்னை கூத்தாடி என்று விமர்சித்தவருக்கு நடிகை குஷ்பு ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமூக பிரச்சினைகளில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். அத்துடன் டுவிட்டர் பக்கத்திலும் அரசியல் சமூக விஷயங்கள் குறித்து தனது அபிப்பிராயங்களை பதிவு செய்து வருகிறார்.
குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். தற்போது டுவிட்டரில் அவர் பதிவிட்ட சில கருத்துகள் பிரச்சினையாகி கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.

செருப்பு காலுடன்...

கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி கேதர்நாத் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று இருந்தார்.

அப்போது அங்கிருந்த நந்தியை செருப்பு காலுடன் அவர் வழிபடுவது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த படத்தை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்துத்துவாகாரர்களே, இப்போது ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை?, உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியாவா?, அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு வேறு விதிகள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு விழாவில் குஷ்பு அம்மன் சிலை முன்னால் செருப்பு காலுடன் உட்கார்ந்து இருந்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதை மனதில் வைத்தே இந்த கருத்தை அவர் பதிவிட்டதாக கூறப்பட்டது.

குஷ்பு வெளியிட்ட இந்த கருத்துக்கு டுவிட்டரில் அவரை பின்தொடரும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

கூத்தாடி

மோடியை பற்றி விமர்சிப்பதற்கு சில தகுதிகள் வேண்டும். அது உனக்கு இருக்கிறதா? என்று சுயபரிசோதனை செய்துவிட்டு வா என்று அவர் பதிவிட்டார்.

இது குஷ்புவை ஆத்திரப்பட வைத்தது. என்னை பின்தொடர்வதற்கு சிலருக்கு தகுதி வேண்டும். அது நிச்சயமாக உன்னிடம் இல்லை என்று அவருக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து குஷ்புவுக்கும், அவரை விமர்சித்தவருக்கும் இடையே டுவிட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் திட்டி டுவிட் செய்தபடி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த நபர் குஷ்புவை கூத்தாடி என்று கூறி பதிவிட்டார். இது குஷ்புவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

‘தலாக்’ பற்றி பேசுங்கள்

பதிலுக்கு அவர் உன் வீட்டு பொம்பளைங்களைப் பற்றி இப்படி பேசுவியாடா? என்று பதிவிட்டார்.

இன்னொருவர் டுவிட்டரில் குறுக்கிட்டு குஷ்புவை முஸ்லிம் பெண்தானே, ‘தலாக்’ பற்றி பேசுங்கள் என்று பதிவிட்டார்.

அவருக்கு பதில் அளித்த குஷ்பு நான் ஒரு ‘இந்தியன்’ என்பதில் பெருமை கொள்கிறேன். மதம் பற்றி பேசுபவர்கள் மனிதர்களே அல்ல என்றார்.

பின்னர் குஷ்புவை விமர்சித்தவர், ‘உங்கள் பேச்சு ஆபாசமாக உள்ளது. இப்படியா பேசுவது’ என்று கேள்வி எழுப்பி பதிவிட்டார்.

அதற்கு குஷ்பு, ‘உன் வீட்டு பெண்களைப்பற்றி பேசியதும் உனக்கு எரிகிறதா?, நானும் ஒரு பெண் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நானும் தாய், மனைவி, மகளாக இருப்பவள், புரியுதாடா?’ என்று பதிலடி கொடுத்தார்.

டுவிட்டரில் குஷ்புவுக்கும், அவரை பின் தொடர்பவர்களுக்கும் நடந்த இந்த சண்டை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.