May 25, 2017
தாய் இறந்தது தெரியாமல் பால் குடித்த குழந்தை: நெஞ்சை உருக்கும்
மத்திய பிரதேசத்தில் தாய் இறந்து போனது கூட தெரியாமல் மார்பில் இருந்து குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்த வீடியோ நெஞ்சை உருக்கியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் Damoh மாவட்டத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் பெண்மணி ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
தனது தாய் இறந்து போன கூட தெரியாமல், அவரின் 17 மாத குழந்தை தாயின் மார்பில் பால்குடித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே பொலிஸ் கூறியதாவது, இன்று காலை ரயில் டிராக்கில் ஒரு பெண்மணி இறந்துகிடப்பதை சற்று தொலைவில் இருந்து பார்த்தோம், சற்று அருகில் நெருங்கி செல்கையில் அவருக்கு பக்கவாட்டில் அவரது குழந்தை பால்குடித்துக்கொண்டிருந்ததை பார்த்ததும் எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது.
அந்த பெண்ணின் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்ததால், இது விபத்து என்று நினைக்கிறோம், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அனுப்பி வைத்துள்ளோம்.
தற்போது, குழந்தைக்கு சளி பிடித்துள்ளதால் பத்திரமாக கவனித்து வருகிறோம், விரைவில் அப்பெண்ணின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பாதுகாப்பாக ஒப்படைப்போம் என கூறியுள்ளார்.
தாய் இறந்தது தெரியாமல் பால் குடித்த குழந்தை: நெஞ்சை உருக்கும்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 25, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.