May 10, 2017
கள்ளக்காதலியை சித்ரவதை செய்து வீட்டில் பூட்டி வைத்து விட்டு தப்பி ஓட்டம் எலக்ட்ரீஷியன் கைது
வேறொரு நபருடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம் அடைந்த எலக்ட்ரீஷியன்
தனது கள்ளக்காதலியை சித்ரவதை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு எலக்ட்ரீஷியன் தப்பி ஓடினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கள்ளக்காதல்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தை அடுத்த உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42), எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ராஜேந்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக வெம்பாக்கம் அருகேயுள்ள உத்திரமல்லூர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது வீட்டில் எலக்ட்ரீஷியன் வேலை செய்துள்ளார்.
அப்போது முருகேசனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக கிருஷ்ணவேணி தனது மகன், மகள், கணவரை உதறிவிட்டு ராஜேந்திரனுடன் அவரது வீட்டுக்கு சென்று விட்டார். அதனால் மனவேதனை அடைந்த ராஜேந்திரன் மனைவி சாந்தி தனது மகனுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை
இதையடுத்து கள்ளக்காதலர்களான ராஜேந்திரனும், கிருஷ்ணவேணியும் கணவன்–மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணவேணிக்கு அதே பகுதியில் வசிக்கும் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராஜேந்திரன் கள்ளத்தொடர்பு குறித்து கிருஷ்ணவேணியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணவேணியிடம் ராஜேந்திரன், ‘‘உன்னை நம்பி எனது மனைவி மற்றும் மகனை துரத்தி விட்டேன். நீ எனக்கு துரோகம் செய்யலாமா?. வேறொருவருடன் உள்ள கள்ளத்தொடர்பை விட்டு விடு’’ என கூறி உள்ளார்’. அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் சுத்தியலால் கிருஷ்ணவேணியின் தலையில் தாக்கி உள்ளார். பின்னர் அவரின் கை, கால்களை கட்டி வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். சிறிது நேரத்தில் ராஜேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
எலக்ட்ரீஷியன் கைது
கிருஷ்ணவேணியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவிக்கு பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து உக்கல் ஏரிக்கரையில் பதுங்கியிருந்த ராஜேந்திரனை கைது செய்தார்.
கள்ளக்காதலியை சித்ரவதை செய்து வீட்டில் பூட்டி வைத்து விட்டு தப்பி ஓட்டம் எலக்ட்ரீஷியன் கைது
Reviewed by மறத்தமிழன்
on
May 10, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.