Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 18, 2017

மனித இறைச்சி பரிமாறியதாக போலியான பேஸ்புக் செய்தியால் லண்டனில் இந்திய ஓட்டலை இழுத்து மூட வைத்த சம்பவம்


லண்டனில் உள்ள ஒரு இந்திய ஓட்டலில் மனித இறைச்சி பரிமாறப்பட்டதாக போலி செய்தி பேஸ்புக்கில் வைரலாக பரவிய நிலையில், அந்த ஓட்டலை இழுத்து மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தென்கிழக்கு லண்டனில் ஷின்ரா பேகம் என்பவர் ‘கறிடுவிஸ்ட்’ என்ற பெயரில் இந்திய உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகம், தன்னுடைய உணவில் மனித இறைச்சியை சேர்ப்பதாக போலியான செய்தி வெளியானது. குறும்புத்தனமான செய்திகளை பதிவு செய்யும் இணையதளத்தில் வெளியான இந்த செய்தி, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டு வைரலாக பரவியது.

அந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் இதனை உண்மை என நம்பி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வாய்க்கு வந்தபடி திட்டியுள்ளனர். சிலர் மிரட்டவும் செய்துள்ளனர். வாடிக்கையாளர்கள் வருகை முற்றிலும் குறைந்து வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஓட்டலை மூட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.



இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மனித இறைச்சி குறித்து வெளியான தகவல் தவறானது என தெரியவந்தது.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஷின்ரா பேகம் கூறுகையில், “எங்கள் ஓட்டலில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக, தப்பும் தவறுமாக ஒரே ஒரு பத்தியில் வெளியான இந்த செய்தியை உண்மை என நம்பிவிட்டனர். ஒரு நபர் ஓட்டலுக்கு போன் செய்து ஓட்டலைத் திறந்தால் அடித்து நொறுக்கிவிடுவோம் என்று மிரட்டினார். காவல்துறைக்கும் ஒருவர் புகார் அளித்தார்.

என்ன தைரியம் இருந்தால் மனித இறைச்சியை எங்களுக்கு கொடுப்பீர்கள்? என சிலர் எச்சரித்தனர். 60 வருடங்களாக எந்த பிரச்சனையும் இன்றி இந்த ஓட்டலை நடத்தி வருகிறோம். யாரோ ஒருவர் இப்படி எழுதிய செய்தி, ஓட்டலின் பெயரை கெடுத்துவிட்டது. வியாபாரமும் பாதித்துவிட்டது” என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.