May 9, 2017
ஓசியில் டிக்கெட் தராததால் டிரைவர், கண்டக்டரை தாக்கிவிட்டு பஸ்சின் சாவியுடன் வாலிபர் ஓட்டம்
என்னிடம் காசு இல்லாததால் ஓசியில் டிக்கெட் தர வேண்டும் எனக்கூறி பஸ்சில் இருந்து இறங்க மறுத்து தகராறு செய்த வாலிபர், டிரைவர், கண்டக்டரை தாக்கி விட்டு பஸ்சின் சாவியுடன் ஓட்டம் பிடித்தார். சாவி இல்லாததால் பஸ்சை இயக்க முடியாமல் டிரைவர் திண்டாடினார். போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர். எண்ணூர் பஸ் நிலையத்தில் இருந்து கோயம்பேக்கு மாநகர பஸ் (தஎ 159இ) இயக்கப்படுகிறது. நேற்று காலை சுார் 5 மணியளவில் பஸ் கோயம்பேடு நோக்கி புறப்பட்டது. டிரைவர் விபின் சந்திரபவுல் (33), கண்டக்டர் மூக்கையன் (45) ஆகியோர் பணியில் இருந்தனர்.
எர்ணாவூர் அருகே சென்றபோது, பஸ்சில் ஏறிய ஒரு வாலிபர் கோயம்பேடு செல்ல டிக்கெட் கேட்டுள்ளார். அவரிடம் பணம் கேட்டதற்கு, ‘என்னிடம் காசு இல்லை. இலவசமாக டிக்கெட் கொடுங்கள்’ என கூறியிருக்கிறார். உடனே, ‘காசு இல்லை என்றால் கீழே இறங்கு’ என்று கண்டக்டர் விசிலடித்து பஸ்சை நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த டிரைவர் விபின் சந்திரபவுல், எழுந்து வந்து அந்த வாலிபரிடம் ‘டிக்கெட் இல்லாமல் சென்றால் செக்கிங் இன்ஸ்பெக்டர் அபராதம் போடுவார்கள். நீ கீழே இறங்கு’ என்று அந்த வாலிபரை கீழே இறக்க முயற்சித்தார். ஆத்திரமடைந்த வாலிபர், 2 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, பஸ் சாவியை எடுத்துக்கொண்டு தப்பினார்.
அவரை டிரைவரும் கண்டக்டரும் விரட்டி சென்றனர். ஆனால், பிடிக்க முடியவில்லை. அவர் மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார்.
இதன் காரணமாக, பஸ்சை எடுக்க முடியாமல் டிரைவர் தவித்தார். அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு வழியின்றி மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். புகாரின்படி எண்ணூர் போலீசார், பஸ் சாவியை எடுத்துக் கொண்டு தப்பி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசியில் டிக்கெட் தராததால் டிரைவர், கண்டக்டரை தாக்கிவிட்டு பஸ்சின் சாவியுடன் வாலிபர் ஓட்டம்
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.