உத்தரப் பிரதேச ஜான்சி தேசிய நெடுஞ்சாலையில் கணவனை கட்டி போட்ட 8 பேர் கொண்ட கும்பல் அவரது மனைவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்த்தின் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த கைவினைகலைஞர்களான தம்பதி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து ஜலான் பகுதிக்கு வியாழக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆரையா பகுதியை ரயில் மூலம் நள்ளிரவில் வந்தடைந்தனர். பின்னர் ஜலான் பகுதிக்கு செல்ல பேருந்துக்காக தம்பதி காத்து கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த சரக்கு வேன் டிரைவர் லிப்ட் தருவதாக கூறி தம்பதியை அழைத்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால் அந்த வேனில் இருவரும் ஏறினர். பின்னர் சிறிது தூரத்தில் உள்ள மதுபான கடையில் வேன் நின்றது. அங்கிருந்த 7 பேரும் வேனில் ஏறினர். பின்னர் வேனை ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு ஓட்டி சென்றனர்.
அங்கு கணவரை கட்டிப் போட்டுவிட்டு அந்த 8 பேரும் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து 8 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜலான் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த பெண், மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.