Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2017

என்டே குஞ்சிமணியை நானே கட்டுச்செய்து எடுத்து. கேரள சாமியார்


சட்டக்கல்லூரி மாணவியால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாமியார் தானே துண்டித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பலாத்காரம் செய்த சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தானே துண்டித்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட சாமியார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சாமியார் வீட்டில் உள்ள சூனியத்தை எடுப்பதாக பெண் ஒருவருடன் கள்ளஉறவு கொண்டார். பின்னர் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவரது மகளையும் பலாத்காரம் செய்யத் தொடங்கினார்.


இந்நிலையில் தற்போது சட்டக்கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி 8 ஆண்டுகளாக தன்னை பலாத்காரம் செய்து வரும் அந்த சாமியாரின் ஆணுறுப்பை கடந்த வெள்ளிக்கிழமை துண்டித்தார். அந்த பெண்ணின் துணிச்சலையும் தீரச்செயலலையும் பாராட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது ஆணுறுப்பை தானே வெட்டிக்கொண்டதாக பாதிக்கப்பட்ட சாமியார் தெரிவித்துள்ளார். சாமியாரின் இந்த வாக்குமூலம் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பெயரை காப்பாற்றிக் கொள்ள இவ்வாறு கூறுகிறாரா அல்லது உண்மையில் என்ன நடந்தது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.