May 17, 2017
மனைவியின் மன ரீதியான துன்புறுத்தல்: கணவன் தூக்கிட்டு தற்கொலை!
நாசிக்: மனைவியின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ளது ஓஜார் பகுதி. இங்கு வசித்து வருபவர் சந்தோஷ் பவார்.(32). தனியார் நிறுவன ஊழியர். நேற்று தனது வீட்டில் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் ஒன்றில் தனது மனைவி மற்றும் அவரது சகோதரர்களின் மனம் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சந்தோஷின் சகோதரர் சச்சின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தோஷின் மனைவி ப்ரியா, அவரது சகோதரர்கள் கிருஷ்ணா ஷிண்டே, விஷ்ணு ஷிண்டே மற்றும் அப்பா போர்குடேஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யபபடவில்லை.
பிரேத பரிசோதனைக்கு பிறகு சந்தோஷின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மனைவியின் மன ரீதியான துன்புறுத்தல்: கணவன் தூக்கிட்டு தற்கொலை!
Reviewed by மறத்தமிழன்
on
May 17, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.