ஜவர்ஹலால்நேரு பல்கலை. மாணவர் மாயமான வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர் நஜீப் அகமது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி மாயமானார். காணாமல் போனதற்கு முன்தினம் அவரை இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் ABVP என்ற மாணவர் அமைப்பை சேர்ந்த சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி போலீசாருக்கும் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த விவகாரத்தில் காணாமல் போன மாணவரை கண்டுபிடிக்க கோரி பல்கலைக் கழக மாணவர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும், நஜீப் அகமது குடும்பத்தின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு இன்று நீதிபதி சிஸ்டானி மற்றும் ரேகா பாலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு விசாரணைக் போலீசாரின் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என நஜீப் குடும்பத்தின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் முறையிட்டார். இதனையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞரின் விளக்கத்தால் திருப்தியடையாத நீதிபதிகள் இவ்வழக்கை சி.பி.ஐ வசம் மாற்றி உத்தரவிட்டனர்.
மேலும், டி.ஐ.ஜி அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரியின் தலைமையில் தான் விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.