வடகொரியாவில் உள்ள பேய் கப்பலில் டஜன் கணக்கில் அழுகிய நிலையில் உடல்கள் கிடப்பதை ஜப்பான் கடற்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வடகொரியாவின் கடற்கரை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சுமார் 15 கப்பல்களில், அழுகிய நிலையில் டஜன் கணக்கில் உடல்கள் கிடக்கின்றன. இது மீனவர்களின் உடலாக இருக்கும் என ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் தனது ஆட்சிகாலத்தில் மீன்பிடித் தொழில்துறையின் உற்பத்தியினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இராணுவத்துறையை கிம் ஜாங் பயன்படுத்திவருகிறார்.
ஆனால், இதுபோன்று பணிக்கு அனுப்பப்படுவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாத காரணத்தினால் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது என்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருத்துக்கள் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கிம் ஜாங்கின் ஆட்சி பிடிக்காத காரணத்தால் அங்கிருந்த தப்பித்து செல்லும்போது உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
இதுபோன்ற, அதிக பிணங்களுடன் 15 கப்பல்கள் வடகொரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் இது பேய் கப்பல்கள் என அழைக்கப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.