Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

காஷ்மீர் ஜிகாத்திற்கு பின்லேடனிடம் பணம் வாங்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் செரீப்


காஷ்மீரில் ஜிகாத்தை வளர்க்க ஒசாமா பின்லேடனிடம் பணம் வாங்கிய நவாஷ் செரீப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என இம்ரான் கட்சி தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் முன்னாள் அதிகாரி காலித் கவாஜா, பயங்கரவாதிகளால் கடந்த 2010 ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்டார். காலித் கவாஜாவின் மனைவி ஷமாமா காலித் எழுதி, அண்மையில் வெளியான புத்தகத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்று இருந்தது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிரான நடவடிக்கைகளில் பின்லேடன் ஈடுபட்டிருந்தபோது அவருடன் காலித் கவாஜாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப், பின்லேடனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.

 பாகிஸ்தானில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டில் இஸ்லாமியச் சட்டத்தை அமல்படுத்துவதாக பின் லேடனிடமும், காலித் கவாஜாவிடமும் ஷெரீப் வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதியை நம்பிய பின்லேடன், தேர்தல் செலவுகளுக்காக நவாஸ் ஷெரீஃபுக்கு நிதியுதவி அளித்தார். எனினும் தேர்தலில் வெற்றியடைந்து பிரதமரான பின்பு, ஷெரீப் தனது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டார் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என கடந்த வருடம் செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காஷ்மீரில் ஜிகாத்தை வளர்க்க ஒசாமா பின்லேடனிடம் பணம் வாங்கிய நவாஷ் செரீப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் இம்ரான் கட்சி தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே நவாஸ் செரீப்பிற்கு எதிராக இம்ரான் கான் கட்சி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது, நவாஸ் செரீப் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. இம்ரான் கான் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், பாகிஸ்தான் ஜனநாயகத்திற்கு எதிராக நவாஸ் செரீப் சதிதிட்டம் தீட்டிஉள்ளார், அதற்காக வெளிநாட்டவரிடம் பணம் வாங்கி உள்ளார், இதுதொடர்பாக நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம் என கூறிஉள்ளார் என எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் இம்ரான் கான் கட்சி எந்தஒரு புதிய ஆதாரங்களையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகிறது. காலித் கவாஜா தொடர்பான புத்தக்கத்தில் இடம்பெற்று உள்ள தகவல்கள் மற்றும் பேட்டிகளை கொண்டே இந்த நகர்வை எடுத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

 ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஜிகாத்தை ஊக்குவிக்க முன்னாள் அல்-கொய்தா தலைவர் பின்லேடனிடம் நவாஸ் செரீப் பணம் வாங்கி உள்ளார் என பேட்டிகளும், புத்தகமும் கூறுகிறது என செய்தி வெளியாகி உள்ளது. பின்லேடனிடம் இருந்து நவாஸ் செரீப் ரூ. 1.5 மில்லியன் பணம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.