May 14, 2017
முதன் முதலாக சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் மத்திய மந்திரி வெங்கய்ய நாயுடு
சென்னையில், 2 வழித்தடங்களில் (வண்ணாரப்பேட்டை - விமான நிலையம், சென்டிரல் - பரங்கிமலை) மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக கோயம்பேடு - பரங்கிமலை இடையேயும், 2-வது கட்டமாக சின்னமலை - விமான நிலையம் இடையேயும் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 3-வது கட்டமாக திருமங்கலம் - நேரு பூங்கா இடையே (7.63 கிலோ மீட்டர் தூரம்) சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்த்தை மத்திய மந்திரி வெங்கய்ய நாயுடு கொடியசைத்து மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் ஜெயக்குமார்,செங்கோட்டையன்,வேலுமணி,தங்கமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர். திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.
இந்த சுரங்க வழித்தடத்தில், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 ரெயில் நிலையங்கள் வருகின்றன. சுரங்கப் பாதையில் ரெயிலில் பயணம் என்பது சென்னை மக்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதால், இப்போதே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதன் முதலாக சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் மத்திய மந்திரி வெங்கய்ய நாயுடு
Reviewed by மறத்தமிழன்
on
May 14, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.