Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2017

தாம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பணியாற்றி வந்த சபீர்சிங் என்ற வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர், சபீர்சிங். இவர், சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஏர்மேனாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல நேற்றிரவு சபீர்சிங் பணிக்குச் சென்றுள்ளார். ரோந்துப்பணியின்போது, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து, சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சபீர்சிங் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

பணிச்சுமை காரணமாக சபீர்சிங் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது குடும்பப் பிரச்னையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.