May 11, 2017
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காந்தியின் பேரன்?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருமிருத்த பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ணா காந்தி நிறுத்தப்படுவார் என தெரிகிறது. பொதுவேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நிறுத்தப்பட்டால் இதர கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என சோனியா காந்தி நினைக்கிறார். எனவே கட்சி சார்பற்றவரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ணா காந்தியை எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தலாம் என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதற்காக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வரும் அவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் விரைவில் சந்திக்க உள்ளார். கோபால கிருஷ்ணா காந்தியை நிறுத்த தேசிய மாநாடு தலைவர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் சீத்தாரம் யெச்சூரி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பல வருடங்கள் தமிழகத்தில் பணியாற்றி உள்ள கோபால கிருஷ்ண காந்தி 2004 முதல் 2009 வரை மேற்கு வங்க ஆளுநராகவும் இருந்துள்ளார். பல நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றி அனுபவமும் அவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காந்தியின் பேரன்?
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.