Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

மது இல்லை என்றால் மன்னாதி மன்னன் எங்கள் தந்தை’: உயிரிழந்த தந்தைக்கு பேனர் வைத்த பிள்ளைகள்


மன்னார்குடியில் மதுப்பழக்கத்தால் உயிரிழந்த தந்தைக்கு அவரது குழந்தைகளும், குடும்பத்தினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்து உள்ள மேலநாகையைச் சேர்ந்தவர் சசி(எ)சாமிநாதன்(39). கார் டிரைவரான இவர் மதுப் பழக்கத்தால் கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு தவமணி என்ற மனைவி, பாலகஸ்தூரி(10), பிரீத்தி(8) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சாமிநாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி  அவரது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அப்பகுதியில் நினைவஞ்சலி பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர். அந்த பேனரில் ‘மது இல்லை என்றால் மன்னாதி மன்னன் எங்கள் தந்தை என்று அவர்களது குழந்தைகள் கூறுவது போல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனரில் உள்ள வாசகங்களை படித்த அக்கம்பக்கத்தினர் கண் கலங்கியபடி சென்றனர்.

இதுகுறித்து சாமிநாதனின் மனைவி தவமணி கூறியதாவது: எனது கணவர் சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வந்தார். அவர் மதுவிற்கு அடிமையானதால் வேலையை இழந்தார். தொடர்ந்து கஷ்டப்பட்டு வாங்கிய காரையும் பறிகொடுத்துவிட்டார். இதையடுத்து அவரை குவைத் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தோம். ஆனால் அங்கும் அவர் தொடர்ந்து மது குடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.

அதன்பின் போராடி அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவந்தோம். இதனால் எனது குழந்தைகளின் எதிர்காலம் தகர்ந்தன. எனது குழந்தைகளுக்கு ஏற்பட்ட நிலை எவருக்கும் வரக்கூடாது என்பதற்காவே விழிப்புணர்வுக்காக இந்த பேனரை வைத்துள்ளேன் என்றார். இதுபோல தமிழகத்தில் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசு தீவிரமாக செயல்படுவது வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.