Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2017

இன்றைய மருத்துவ சிந்தனை குப்பைமேனிக் கீரை


குப்பைமேனிக் கீரையைக் காயவைத்துப் பொடியாக்கி ,ஓரு ஸ்பூன் அளவுக்கு பசும்பாலில் கலந்து சர்க்கரை சேர்த்துக் குடித்து வந்தால் நெஞ்சுவலி சரியாகும்.

குப்பைமேனிக் கீரையை அரைத்து அதில் சுண்ணாம்பு கலந்து தடவினால் தொண்டைக்கட்டு சரியாகும்.

குப்பைமேனிக் கீரை, மஞ்சள், வேப்பிலை இவை மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக் குளித்து வந்தால் தேவையில்லாத முடிகள் உதிர்ந்துவிடும்.

குப்பைமேனிக் கீரை, நிலவேம்பு இவை இரண்டையும் சம அளவு  அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் தீரும்.

குப்பைமேனிக் கீரையை கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவுக்குக் கொடுத்தால் வாந்தி ஏற்படும் . அதில் நெஞ்சுசளி எல்லாம் வெளியேறிவிடும்.

குப்பைமேனிக் கீரைச் சாற்றுடன்   (100 மில்லி) விளக்கெண்ணெய் (ஒரு லிட்டர்) சேர்த்துக் காய்ச்சி, தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூலக் கிருமிகள் அழிந்துவிடும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.