Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 12, 2017

ஹரியானாவில் அரசு பள்ளி மதிய உணவில் இறந்து கிடந்த பாம்பு: அதிர்ச்சியடைந்த மாணவிகள்


ஹரியானா: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகையை அதிகப்படுத்தும் வகையிலும், கல்வியை நீட்டிக்கும் வகையிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவை அரசு வழங்கி வருகிறது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இலவசமாக மதிய உணவு அளித்து வருகின்றன. ஆனால் அதன் தரம் குறைவு காரணமாக மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஒருவித அச்சம் நிலவிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் உள்ள ராஜ்கேயா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

அப்போது மாணவி ஒருவரின் உணவில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதைக் கண்ட மாணவிகள் உணவை வைத்து விட்டு, அலறியடித்து கொண்டு ஓடினர். சிலர் தங்கள் மதிய உணவை உண்டதால், அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த உணவை இஸ்க்கான் தொண்டு நிறுவனம் பள்ளிக்கு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.