May 9, 2017
நீட் தேர்வின் போது மாணவிகளிடம் வரம்பு மீறிய அதிகாரிகள்: விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உத்தரவு
நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளிடம் வரம்பு மீறயதை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் எனப்படும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மாணவிகளிடம் ஆடை கட்டுப்பாடு உள்ளிட்ட கெடுபிடிகள் காட்டப்பட்டன. சேலை, பைஜாமா, கூர்தா, வளையல், கிளிப், கம்மல், நகை, கடிகாரம் போன்றவை அணிந்து வர மத்திய கல்வி வாரியம் தடை விதித்திருந்தது. இதனால் நகைகளை அணிந்து வந்த மாணவிகள் பதற்றத்துடன் அவற்றை கழற்றி கொடுத்துவிட்டு மனஉழைச்சலுடன் தேர்வறைக்கு சென்றனர். மத்திய கல்வி வாரியத்தின் கெடுபிடிகளுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை போன்ற சோதனையை அதிகாரிகள் மாணவ, மாணவிகளிடம் காட்டினர். உச்சகட்டமாக கேரள மாநிலம் கன்னூர் மாநிலத்தில் மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றக்கூறியது நாடு முழுவதும் அதிர்வைளைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அது குறித்து முழுமையான விசாரணையை நடத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. விதிமுறை என்ற பெயரில் மாணவிகளிடம் வரம்பு மீறி நடப்பதை ஏற்க முடியாது என்றும் அந்த ஆணையம் கண்டித்துள்ளது.
நீட் தேர்வின் போது மாணவிகளிடம் வரம்பு மீறிய அதிகாரிகள்: விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உத்தரவு
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.