Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2017

சென்னையில் இன்றே ஸ்டிரைக்கைத் தொடங்கிய பேருந்து தொழிலாளர்கள்... மக்கள் அவதி


தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் இன்று முதல் பேருந்துகளை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

சென்னை: தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்தை தொழிலாளர்கள் இன்றே தொடங்கினர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7000 நிலுவைத் தொகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த 4-ஆம் தேதி அறிவித்தனர்.

தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ரூ.1250 கோடி அளவிலான நிதியை வழங்க அரசு ஒப்புக் கொண்டது. எனினும் தொழிற்சங்கங்கள் இதனால் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் அறி்வித்துள்ள நிலையில் சென்னை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டன.

சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள பணிமனையில் தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தினர். மேலும் அரசு நாமம் போட்டதாக தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பல்லவன் சாலையில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.