Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2017

திருப்பூரில் போலீஸ் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்றதொழிலாளர் பலி!


வீரபாண்டி பகுதியில் போலீசார் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்வத்தால் அதிர்ச்சியடைந்துள்ள அப்பகுதி மக்கள் காவல்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் வீரபாண்டி பிரிவில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரேஷ் என்ற பின்னலாடை நிறுவன தொழிலாளி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை துரத்திப் பிடிக்க முயன்றனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க வேகமாக வண்டியை ஓட்டிய சுரேஷ் சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி கீழே விழுந்தார்.

உடலை எடுக்க விடாமல்..
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சுரேஷின் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
.
படிப்பு செலவை ஏற்கவேண்டும்..
வீரபாண்டி பிரிவில் சாலைமறியலில் ஈடுபட்ட அவர்கள், சுரேஷ் உயிரிழப்புக்கு காரணமான காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் சுரேஷின் குழந்தைகளின் படிப்பு செலவை காவல்துறையே ஏற்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்..

உயிரிழந்த சுரேஷின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். சாலையோரம் கிடந்த அவரது உடலை எடுக்கவும் அவரது உறவினர்கள் அனுமதிக்கவில்லை.
போராட்டத்தால் பரபரப்பு

உயிரிழந்த சுரேஷ் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.