Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2017

நெகிழ்ச்சி சம்பவம்: வீடின்றி தவித்த மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த சக மாணவர்கள்


தந்தையை இழந்து தவிக்கும் மாணவிக்கு சக மாணவர்கள் சேர்ந்து ரூ.4.5 லட்சம் செலவில் வீடு கட்டி தந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயின்ட் மேரிஸ் பள்ளியில் படிப்பவர் அருணிமா. பள்ளியின் என்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கும் இவர் தனது தந்தையை இழந்து பள்ளியில் படித்து வருகிறார்.

சொந்தமாக வீடில்லாமல் கஷ்டப்பட்டு வந்த அருணிமாவுக்கு மற்ற மாணவர்கள் ரூ.4.5 லட்சம் செலவில் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதற்காக அப்பள்ளியில் படிக்கும் 12,000 மாணவர்கள் பழைய செய்தித் தாள்கள், பூ மாலைகள், சோப்பு உள்ளிட்டவைகளை விற்று பணத்தை ஏற்பாடு செய்துள்ளனர். ஒரு வருடத்துக்கும் மேலாக அவர்கள் இப்பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ரேடியோ நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்று பல தன்னார்வலர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். மாணவர்களின் உழைப்பின் பலனாய் தற்போது அருணிமாவுக்கு புதிய வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.