மெரினா கடற்கரையில் திருவள்ளூர் சிலை அருகே மெழுகுவத்தி ஏந்தி நினைவேந்தல் அஞ்சலி செலுத்திய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன் ஆகியோர் உள்பட மொத்தம் 17 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, புழல் சிறைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கைது செய்து கொண்டு போகும்போது பஸ் பின்பக்க படிக்கட்டு அருகே உள்ள சிறிய கண்ணாடியை உடைத்துவிட்டனர். எனவே, ரிமாண்ட் செய்கிறோம்' என்றார்கள்.
மருத்துவப் பரிசோதனை முடிந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் திருமுருகன் காந்தி நம்மிடம் பேசுகையில், 'மெரினாவின் அழகைச் சீர்குலைத்துவிடுவோம் என்று அனுமதி இல்லை என்கிறார்கள். இதுவரை 7 ஆண்டுகளாக அமைதிவழியில் நினைவேந்தலை மெரினாவில் நடத்தினோம். ஒவ்வொர் ஆண்டும் மெரினாவை நாங்கள் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். ஆனால், இந்த ஆண்டு கைது செய்துள்ளார்கள். போலீசார் எங்களைத் தாக்கினார்கள். எனவே, எக்ஸ்ரே எடுத்து மருத்துவபரிசோதனை செய்தார்கள்' என்று கூறினார்.
தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன் கூறுகையில், 'ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக தமிழர் கடற்கரையில் கூடுவது நமது பண்பாட்டு உரிமை. இதைத் தடுக்கும் உரிமையும் அதிகாரமும் யாருக்குமில்லை. மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் இந்த நிகழ்வுக்கு கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழர் விடியல் கட்சி உறுதுணையாக இருந்தது. சிறையில் போடுவதன் மூலம் எங்களை அடக்கி ஒடுக்கிவிட முடியாது. மத்திய பி.ஜே.பி அரசையும் தமிழக அரசையும் கண்டிக்கிறோம்' என்றார்.
Dailyhunt
மெரினாவில் நினைவேந்தல்... புழல் சிறையில் திருமுருகன் காந்தி..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 22, 2017
Rating: 5
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.