Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2017

சாலையோரத்தில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம்.. கரூர் அருகே பரபரப்பு!


கரூர் அருகே சாலையோரத்தில் கிடந்த சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்தி அருகே சாலையோரத்தில் கிடந்த சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், பரமத்தியை அடுத்துள்ள கொளந்தாப்பாளையம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அந்த சாக்குமூட்டையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து அங்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

அந்த பெண் யாரென்று அடையாளம் தெரியவில்லை. உடல் முற்றிலும் அழுகியுள்ளதால் அந்தப் பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளாரா? எங்கே கொலை செய்யப்பட்டார்? இங்கே கொண்டுவந்து போட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.