Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 29, 2017

‘‘கஞ்சா அடிச்சா கேஸ் கிடையாது’’ அமலுக்கு வரும் புது சட்டம்! போலீசார் மகிழ்ச்சி


பிரான்ஸ் நாட்டில் கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் மற்ற குற்ற வழக்குகளில் கவனம் செலுத்த முடியாமல் கஞ்சா வழக்குகளிலேயே கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் அங்கு கஞ்சா பயன்படுத்தும் நபர்களுக்கு €3,750 வரை அபராதமும், ஒரு வருடம் வரை சிறை தண்டனையும் தற்போது உள்ள சட்டத்தின் படி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு மட்டும் 1,80,000 பேர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாம்.
சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மேக்ரோன் தனது தேர்தல் அறிக்கையில், தான் ஆட்சிக்கு வந்தால் கஞ்சா உபயோகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என கூறியிருந்தார்.
அதன்படி, கஞ்சா உபயோகப்படுத்தும் நபர்களுக்கான சிறை தண்டனையில் விலக்கு அளிக்கும் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசின் சார்பில் கூறுகையில், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், பிரான்ஸில் கஞ்சா உபயோகப்படுத்துவது குற்றச்செயலாக தான் பாவிக்கப்படும்.
இந்த சட்டத்தை நடைமுறை படுத்துவதால் போலீசார் மற்ற முக்கிய வேலைகளில் தங்களை இனி ஈடுபடுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார். இந்த புதிய சட்டத்துக்கு காவல்துறை சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஆனாலும், நீதிபதிகள் இந்த சட்டத்துக்கு குறைந்தளவு ஆதரவே அளித்துள்ளார்கள். இதனால் எதுவும் மாறப்போவதில்லை என நீதிபதிகள் சங்கத்தை சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
பிரான்ஸில் கடந்த 2014ம் ஆண்டில் நடந்த கருத்துக்கணிப்பில் 17 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கஞ்சா பயன்படுத்தியுள்ளதாகவும், 700,000 பேர் தினமும் கஞ்சா பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.