May 7, 2017
கள்ளக்தாதலனோடு சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி.. சுடுகாட்டில் வைத்துத் தூக்கிய போலீஸ்!
பெங்களூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு இயற்கை மரணம் என நாடகமாடி இறுதிச் சடங்கு செய்ய முயற்சித்த போது இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு இயற்கை மரணம் என நாடகமாடி இறுதிச் சடங்கு செய்ய முயற்சித்த போது இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ஜேசி நகர் திம்மேகௌடா சாலையைச் சேர்ந்தவர் மான் சிங் (57). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக இருந்தார்.
அவரது மனைவி சந்திரா பாய் (35). அவரும் கணவர் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பங்கிராம்நகரைச் சேர்ந்த அசோக் (37) அவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
கள்ளத் தொடர்பு
இந்நிலையில் சந்திரா பணியாற்றும் நிறுவனம் கேட்டுக் கொண்டதன் பேரில் அசோக்கின் நிறுவனத்துக்கு சந்திரா டெபுடேஷன் எனப்படும் தற்காலிகமாக பணியாற்ற கடந்த 8 மாதங்களாக சென்றிருந்தார். அப்போது சந்திராவுக்கும், அசோக்கிற்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
தனிமையில் சந்திப்பு
இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் பணி நிமித்கமாக கடந்த 4-ஆம் தேதி மான் சிங் பெங்களூரின் கிராமப்புற பகுதியான ஹோஸ்கோட்டுக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள இருவரும் திட்டமிட்டனர்.
வீட்டுக்கு சென்ற அசோக்
அதன்படி, அசோக், சந்திராவின் வீட்டுக்கு சென்று தனிமையில் இருந்தனர். அப்போது இரவு 11 மணியளவில் வீடு வந்த மான் சிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது இருவரும் கையும் களவுமாக பிடிப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மான் சிங், மனைவி சந்திராவை சரமாரியாக தாக்கினார்.
ஆத்திரமடைந்த அசோக்
தன் கள்ள காதலியை தன் கண் முன்னால் தாக்குவதை பார்க்க முடியாத அசோக், மான் சிங் மீது பாய்ந்து அவரை சரமாரியாக தாக்கினார். அப்போது மான் சிங்குடன் தான் வாழ விரும்பவில்லை என்பதால் அவரை கொன்று விடுமாறு அசோக்கிற்கு சந்திரா உத்தரவு போட்டார். இதை ஏற்ற அசோக், அங்கிருந்த துணியால் மான் சிங்கின் கழுத்தை நெரித்து கொன்றார்.
கதறியழுத சந்திரா
பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மான் சிங் மூச்சு முட்ட குடித்துவிட்டு இறந்துவிட்டதாக சந்திரா அனைவரையும் நம்ப வைத்து மான் சிங்கின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தார். பின்னர் அவருக்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற இடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அச்சமயம் யாரோ ஒருவர் இவர்களது கள்ளக்காதலை ஜேசி நகர் போலீஸாருக்கு போன் போட்டு புட்டு புட்டு வைத்தனர். இவர்கள் அமிருதஹள்ளி போலீஸாருக்கு தகவல் அளித்து மான் சிங்கின் உடல் தகனத்தை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து சுடுகாட்டில் இருந்த சந்திராவையும், அசோக்கையும் போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்தாதலனோடு சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி.. சுடுகாட்டில் வைத்துத் தூக்கிய போலீஸ்!
Reviewed by மறத்தமிழன்
on
May 07, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.