Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2017

சசியிடம் பணிகிறார் மோடி..! ஒபிஎஸ், இபிஎஸ்க்கு அதிமுகவில் அல்வா ரெடி..!


சசி குடும்பம் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில் இருந்து பின்வாங்குகிறது, பாரதிய ஜனதா கட்சி. இதில் மோடியும் சசிகலாவிடம் இணைந்து செயல்பட தயாராகிவிட்டாராம்.

தமிழக அரசியலில் கடந்த டிசம்பர் 5ம்தேதி ஜெயலலிதா இறந்த பின்பு தமிழக அரசை இயக்கும் நடவடிக்கையை மத்தியில்ஆளும் பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்தது.


அதிமுகவை தனக்காகச் செயல்படுத்துவார் என்று நம்பி ஒபிஎஸ்ஸை தமிழகத்தின் முதல்வராகக் கொண்டு வந்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதாவுடனே வாழ்ந்துவிட்ட சசிகலா எல்லாத்தையும் இழந்த நான் ஏன், கட்சியையும், ஆட்சியையும் எனதாக்கிக் கொள்ளக் கூடாது என்று யோசித்தார்.

அவரது யோசனையை நெய்யை ஊற்றி கொழுந்துவிட்டு எரியவிட்டவர் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர். அதிமுக அமைப்பு சட்டத்தின் விதிகளைமீறி அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக ஆசைப்பட்டார் அது முடியாமல் போனது சிறைக்குச் சென்றார்.

தனது அக்கா மகனை துணைப்பொதுச் செயலாளராக்கினார். அவரும் இடைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டார். இதனிடையில் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.

ஒபிஎஸ்க்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டது. அவரால் 12 எம்எல்ஏக்களை தவிர யாரையும் அவரது அணிக்குக் கொண்டு வரமுடியவில்லை. இரட்டை இலையை முடக்கிவிட்டால் அனைவரும் என் பக்கத்திற்கு வந்துவிடுவார்கள் என்று கூறினார்.

அதனையும்மத்திய அரசு செய்தது. சசி அணியினர் யாரும் அவரது பக்கத்திற்கு வரவில்லை. பாரதிய ஜனதா கட்சியை நம்பிய, ஒபிஎஸ் மோசம் போக உள்ளார். அது போல ஓபிஎஸ்ஸை நம்பிய பா.ஜ.க அதிமுகவிவகாரத்தில் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் ஒபிஎஸ்ஸை விட இபிஎஸ் அணியினர் அதானி குழுமத்தின் அதிபர் மூலம் காய்நகர்த்தியது. மோடியைத்தன்வசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் மோடியும், அதிமுக கட்சியின் தலைவர் போன்று, ஒபிஎஸ் அணியினர், இபிஎஸ் அணியினர், தினகரன்அணியினர் என்று அதிமுகவில் உள்ள அனைத்துக் கோஷ்டிகளையும் சந்தித்துப் பேசிவருகிறார்.

டெல்லியில் நிர்வாணமாக ஓடிய விவசாயிகளைச் சந்திக்க வில்லை என்பதுதான் மிகப் பெரியகொடுமை. ஜனாதிபதி தேர்தலில் ஒன்று பட்ட அதிமுகவின் ஆதரவு வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமாகஉள்ளது.

பின்னர் ரஜினி, அதிமுக, பா.ஜ.க கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதும் பா.ஜ.கவின்திட்டமாக உள்ளதாம். இபிஎஸ் அணியில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர் கூறியதாவது: இபிஎஸ் அணியில் 75 எம்எல்ஏக்கள் சசியின் தீவிர ஆதரவுஎம்எல்ஏக்கள்தான். அவர்கள் நினைத்தால் ஆட்சியைக் கலைத்துவிட முடியும்.

எங்களை இப்படிப் பலிவாங்கிய பா.ஜ.க என்னையும், தினகரனையும் வெளியே விடட்டும். எங்களிடம் ஆதரவு கேட்கட்டும்பிறகு வைத்துக் கொள்கிறேன் என்று சிறையில் சசிகலா கொக்கரித்து வருகிறாராம்.
பாரதிய ஜனதா கட்சியை நம்பி சசிக்கு துரோகம் செய்ய துணிந்த இபிஎஸ். துரோகம் செய்த ஒபிஎஸ் நடு தெருவுக்குவருவது நிச்சயமாம். சசியும், மோடியும் இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று ஆருடம் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.