Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2017

செங்கல்பட்டு சிறையில் பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி தற்கொலை!


சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செங்கல்பட்டு கிளைச் சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த துரை என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செயய்ப்பட்டு செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே செய்த குற்றத்திற்காக மன உளைச்சலில் துரை இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் துரை இன்று காலை சிறையில் உள்ள சமையலறையில் கயிற்றால் தூக்கிவிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அவரது உடலைக் கைப்பற்றிய சிறைக் காவலர்கள் கைதி துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.