May 12, 2017
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ‘கூகுள்’ நிறுவனம் மீது வழக்கு உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை
முன்னணி இணையதள தேடுபொறியான ‘கூகுளில்’ கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு அவதூறான தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக அப்போது பல்வேறு தரப்பினரும் தெரிவித்த புகார் காரணமாக பின்னர் அது நீக்கப்பட்டது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நந்த் கிஷோர் என்ற வக்கீல் ஷாஜகான்பூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கூகுள் நிறுவனத்துக்கு எதிராக நேற்று புகார் செய்தார். பிரதமர் மோடி குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட தவறான தகவல் தனக்கும், மற்றவர்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு கமல் கிஷோரும் உறுதி செய்தார்.எனினும் இந்த வழக்கு தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், எனவே இது குறித்து எதையும் தெரிவிக்க முடியாது எனவும் கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ‘கூகுள்’ நிறுவனம் மீது வழக்கு உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை
Reviewed by மறத்தமிழன்
on
May 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.