May 30, 2017
அத்வானி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்! குற்றச்சாட்டுப் பதிவு!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் இன்று ஆஜராகின்றனர். பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. வழக்கு விசாரணை லக்னோ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இன்று ஆஜர்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்காக, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவுள்ளனர்.
தினசரி விசாரணை
ரேபரேலி, லக்னோ நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்ததை ஒரே வழக்காக மாற்றி, லக்னோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கை, லக்னோ சிறப்பு நீதிமன்றம், தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது.
இன்று குற்றச்சாட்டுப் பதிவு
இந்த வழக்கில் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் மீது இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதால், அவர்கள் 3 பேரும் வரும் 30-ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் இனறு நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.
பாதுகாப்பு தீவிரம்
பாஜக மூத்த தலைவர்கள் ஆஜராவதால் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதி இடிப்பு வழக்கு சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்வானி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்! குற்றச்சாட்டுப் பதிவு!
Reviewed by மறத்தமிழன்
on
May 30, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.