Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2017

இவிஎம் ஓட்டு மெஷின் ஹேக்கிங் எதிரொலி நடைமுறையில் இருக்கும் ஓட்டுப்பதிவு மெஷின் களை மற்ற தேர்தல் ஆணையம் முடிவு


இவிஎம் ஓட்டல் மெஷின் ஹேக்கிங் எதிரொலி : இனி அனைத்து தேர்தல்களிலும் விவிபிஏடி இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல் ஆணையம்

இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளரின் ஓட்டு பதிவானதை உறுதி செய்யும் விவிபிஏடி இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறிஉள்ளது.

தேர்தல்களில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது பெருத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மின்னணு ஓட்டு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று கூறப்படுவதை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இது பற்றியும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிகளிடமும் விவாதிக்க ஏற்ற வகையில் தேர்தல் கமிஷன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. தேர்தல் கமிஷன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சிகள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் 7 தேசிய கட்சிகள் மற்றும் 35 பிராந்திய கட்சிகள் கலந்துக் கொண்டன.

கூட்டத்தை அடுத்து தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி பேசுகையில் இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளரின் ஓட்டு பதிவானதை உறுதி செய்யும் விவிபிஏடி இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என கூறிஉள்ளார். இதற்கிடையே மின்னணு ஓட்டு எந்திரங்களை ஹேக்கிங் செய்ய முடியும் என குற்றம் சாட்டும் அரசியல் கட்சிகள் அதனை செய்துக்காட்டவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் விவிபிஏடி இயந்திரங்களை வாங்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் நிதியும் பெற்று உள்ளது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள தேர்தல்களில் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுடன், வாக்காளரின் ஓட்டு பதிவானதை உறுதி செய்யும் விவிபிஏடி இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி செய்து உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.