May 20, 2017
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு: ஓட்டல், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் வகையிலான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருகிற ஜூலை 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்படுகிறது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என 4 அடுக்காக வரி விதிப்பு இருக்கும். எந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிப்பது குறித்த ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை காஷ்மீரின் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இக்கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு வரி விதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. டூத்பேஸ்ட், ஹேர் ஆயில், சோப்பு போன்றவற்றுக்கு குறைந்தபட்ச வரி விதிக்கப்பட்டது. பால், உணவு தானியங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.
தங்கத்தின் மீதான வரி விதிப்பு மற்றும் சேவை இனங்கள் மீதான வரி நேற்று முடிவு செய்யப்பட்டது. தொலைத்தொடர்பு, விமான பயணம், காப்பீடு, ஓட்டல், ரெஸ்டாரன்ட் சேவை வரிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வரிகள் இறுதி செய்யப்பட்டன. சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஓலா, உபர் போன்ற டாக்சி சேவைகளுக்கு தற்போது 6 சதவீத வரி உள்ளது. இது 5 சதவீதமாக குறைந்துள்ளது. ஏசி அல்லாத ரயில் டிக்கெட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏசி டிக்கெட்கள் மீது 5 சதவீத சேவை வரி விதிக்கப்படும். மெட்ரோ, மின்சார ரயில் போன்ற உள்ளூர் ரயில் சேவைகள், ஹஜ் யாத்திரை போன்ற ஆன்மிக புனித பயணங்கள் ஆகியவற்றுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியால் பொருட்களுக்கு தற்போது உள்ள விலை உயர வாய்ப்பில்லை. தங்கத்தின் மீதான வரிவிதிப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ம் தேதி நடக்கிறது.
ஓட்டல் அறை வாடகை ரூ.5,000க்கு மேல் இருந்தால் அவற்றுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.1,000க்கு கீழ் உள்ள வாடகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2,500 முதல் ரூ.5,000க்கு கீழ் அறை வாடகை கொண்ட ரெஸ்டாரன்ட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, மிக சாதாரண விடுதி அறை கட்டணங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தற்போது தொலைத்தொடர்பு துறையில் சேவை வரி 15 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் 18 சதவீதமாக விதிக்கப்பட்டுள்ளதால் கட்டணங்கள் உயரும். இதுபோல் சினிமா டிக்கெட்களுக்கு உச்சகட்ட வரியான 28 சதவீதம் விதிக்கப்படுவதால் அவற்றின் விலை உயரும். மாநிலங்கள் எவ்வளவு வரி விதிக்கின்றன என்பதை பொறுத்து கட்டணங்களில் மாற்றங்கள் இருக்கும்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு: ஓட்டல், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும்
Reviewed by மறத்தமிழன்
on
May 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.