May 13, 2017
இலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.. இளையராஜா வீடு நாளை முற்றுகை: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
இலங்கையில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. போராட்டம் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் ஜூலை மாதம் யாழிலும், கொழும்பிலும் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொள்கின்றார்.
நாளை போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் வரும் 14 .05 .2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள இளையராஜா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.
உலகை ஏமாற்ற நிகழ்ச்சி
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும், ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உலகை எமாற்றும் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இசை நிகழ்வு நடத்துகின்றது. இந் நிகழ்வில் இளையராஜா பங்கு பற்றக்கூடாது என முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
போராட்டங்கள் தொடர்கதை
தமிழீழத்தில் இலங்கை ராணுவத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை (நிலங்களை) விடுவிக்கக் கோரி இரவு பகலாக பெண்கள் சிறுவர்கள் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புறக்கணியுங்கள்
இந்த நிலையில் அங்கு நடை பெற இருக்கும் இசை நிகழ்வில் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்வு நடத்துவது தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக அமையும் எனவே உலகத்தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந்நிகழ்வை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.. இளையராஜா வீடு நாளை முற்றுகை: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
Reviewed by மறத்தமிழன்
on
May 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.