Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 8, 2017

கருப்பு நூலை கழட்டிய ஆபீசருங்க... அதை ஏன் கழட்டச் சொல்லலை? நெட்டிசன்ஸ் கேள்வி!


நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கையில் கட்டியிருந்த கருப்பு கயிறு கழற்றப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது.

சென்னை: நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் கையில் கட்டியிருந்த கருப்பு கயிற்றை கழற்றச் சொல்லி அட்டூழியம் செய்த நீட் தேர்வு அலுவலர்களின் செயல்பாடுகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

கயிறு என்று வந்து விட்டால் எல்லாமே ஒன்றுதானே. கருப்பு நூலை எடுக்கச் சொன்னவர்கள், அதேபோல மற்ற நூல்களுக்கும் அல்லவா தடை விதித்திருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சூடான விவாதம் கிளம்பியுள்ளது.
நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணித்துவிட்டது டெல்லி. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவுக்கு சவக்குழி தோண்டிவிட்டார்கள்.

 கதறி அழவைத்த கொடுமை
இந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல.. மாணவர்களையும் அழைத்துச் சென்ற பெற்றோரையும் பாதுகாப்பு கெடுபிடியின் பெயரால் கதறி அழ வைத்துவிட்டது சிபிஎஸ்இ வாரியம்.


உள்ளாடைகளையும் கூட..
மாணவிகளின் உள்ளாடைகளையும் கூட கழற்ற சொன்ன படு பயங்கரமெல்லாம் அரங்கேறியுள்ளது. துப்பட்டாவை கழற்றி வீசியிருக்கிறது சிபிஎஸ்இ கும்பல்.

 கொடூரம் அரங்கேற்றம்
மாணவர்களின் முழுக்கை சட்டைகள் அறுக்கப்பட்டு அரைக் கைகளாக்கப்பட்ட கொடூரத்தையும் அரங்கேற்றியிருக்கிறார்கள். அத்துடன் மாணவர்கள் கையில் கட்டியிருந்த கருப்பு கயிறையும் அறுத்தெறிந்திருக்கிறார்கள்.

 அதை ஏன் கழட்டலை?
கறுப்புக் கயிறை கழற்றச் சொன்னவர்கள் சிலர் "உள்ளே" அணிந்துள்ள நூலை மட்டும் அனுமதித்தது ஏன் என்று சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. இருவருமே ஒரே மதத்தவர்தான். இருவரும் நம்பிக்கையின் பேரில்தான் இதை அணிகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒருவருக்கு மட்டும் பாரபட்சம் காட்டியது ஏன். இதில் நியாயம் இல்லையே என்று விவாதம் கிளம்பியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.