May 6, 2017
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி!
சிவகங்கை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல கோடி மோசடி செய்த நபரின் வீட்டை பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை அருகே பல்வேறு நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சாணிபட்டியைச் சேர்ந்த இளங்கோ மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்டோர் இவர்களை அணுகியுள்ளனர். அவர்களிடம் தலா 25,000 ருபாய் என மூன்று கோடியே எழுபத்தைந்து லட்சம் வரை பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் யாருக்கும் இதுவரை வேலை பெற்றுத்தராமல் காலம் கடத்தியதால் சந்தேகமடைந்து கட்டிய பணத்தை திரும்பக் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து முகவர் கல்யாணசுந்தரம், மற்றோரு முகவர் இளங்கோவிடம் இருந்து பணத்தை பெற்றுத்தருவதாக கூறி அனைவரையும் சிவகங்கை அழைத்து சென்றுள்ளார். அங்கு இளங்கோ இல்லாததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வந்த போலீசார், இளங்கோவின் மனைவியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி!
Reviewed by மறத்தமிழன்
on
May 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.