Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 20, 2017

உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி? - டுவிட்டரில் பதிவிட்ட ஓபிஎஸ்


உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி பேசி முடிவெடுக்கப்படும் என்று ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து பின் அறிவிப்போம் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓபிஎஸ் தனது அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தமிழக நலன் குறித்தே ஆலோசிக்கப்பட்டது என்று நேற்று தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும் அதற்கு பிரதமர் கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

பிரதமருடன் சந்திப்பு
சென்னை திரும்பிய ஓபிஎஸ் பிரதமர் உடனான சந்திப்பு பற்றி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 பாஜக உடன் கூட்டணியா?
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து பின் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

தேதி அறிவித்த பின்னர் முடிவு
அதே நேரத்தில் தனது அடுத்த பதிவில் உள்ளாட்சி தேர்தல் பற்றி யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் தேதி அறிவித்த பின்னரே அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

என்ன சொல்வார் ஓபிஎஸ்
இதன்மூலம் நேற்றைய சந்திப்பில் அவர் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து பேசியிருப்பார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மேலும் விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.