May 24, 2017
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவோம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றி விட்டது என அவர் கூறினார்.
பாரதிய ஜனதா ஆட்சி தமிழகத்தில் அமைந்தே தீரும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ஆட்சியை கலைத்து விட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதில்லை என்றும் அவர் கூறினார்.
எந்த மாநில அரசையும் கலைக்கும் திட்டம் பாஜகவுக்கு கிடையாது என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியே தீரும் என திட்டவட்டமாக கூறினார்.
மேலும் கருணாநிதியை ஏமாற்றுவதற்காக ஸ்டாலின் வைரவிழா நடத்துகிறார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக அரசு நடவடிக்கை கல்வித்துறையில் சிறப்பாக உள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன்
Reviewed by மறத்தமிழன்
on
May 24, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.