May 2, 2017
ஆதார் அடையாள அட்டைக்காக கைரேகை மட்டுமல்ல மரபணு சோதனையும் செய்வோம்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
ஆதார் அடையாள அட்டைக்காக, மரபணு சோதனை செய்தால் கூட தவறில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதம் முன் வைத்துள்ளார்.
பான்கார்டு, வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபையில் அமளி துமளி-வீடியோ..
அப்போது மத்திய அரசு இவ்வாறு வாதம் செய்தது. மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வாதம் முன்வைத்தார். அவர் மேலும், கூறுகையில்,
சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் போன்றவை அவசியம்.
ஒவ்வொரு போலி பான் கார்டாலும் பல ஆயிரம் கோடி அரசின் கருவூலத்திற்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. 2009ம் ஆண்டில், பான்கார்டிலேயே கண் விழித்திரை, கை ரேகை போன்றவற்றை புகுத்தி, பான் பிளஸ் என்ற பெயரில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் ஆதார் என்ற பெயரில் தனி அடையாள அட்டையை நத்தன் நிலகேனி உருவாக்கினார். எனவே ஆதாரில் கைரேகை பெறுவதில் தப்பில்லை.
ஆதார் அடையாள அட்டையில் போலி தயார் செய்ய முடியாது. அனுமார் போட்டோவுடன் வந்த ஆதார் போன்றவை வேறு விஷயங்கள். அது போலி கிடையாது. 1975ம் ஆண்டிலேயே பான் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் ஒரு மேம்படுத்தப்பட்ட பான் அட்டை அவ்வளவுதான். அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, ஆதாரால் பலனில்லை என்று கூறும் வாதம் ஏற்புடையது இல்லை.
ஆதாருக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் உரிமை மீறல் கிடையாது. பிற நாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை செய்யப்படுகிறது.
ஆதார் அடையாள அட்டைக்காக இந்தியாவிலும் கூட மரபணு சோதனை செய்யலாம், அதுகூட தவறு கிடையாது என்று என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டைக்காக கைரேகை மட்டுமல்ல மரபணு சோதனையும் செய்வோம்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.