Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

குஜராத்தைசேர்ந்த ராணுவ வீரர்கள் யாரும் வீர மரணம் அடைவதில்லை: அகிலேஷ் யாதவ்


குஜராத்தைசேர்ந்தவர்கள் யாரும் வீர மரணம் அடைவதில்லை என்று அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த எந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைவதில்லை என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-  உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் தென் இந்தியா பகுதிகளை சேர்ந்தவர்கள் நாட்டிற்காக வீர மரணம் அடையும்  செய்திகள் அடிக்கடி வருகிறது. ஆனால், என்றைக்காவது குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்ததாக  செய்தி வந்துள்ளதா? தேசியவாதம், வந்தே மாதரம், தியாகிகள் பெயரில் அவர்கள் அரசியல் செய்கின்றனர். அவர்கள் தேசியவாதமாக கருதுவது எதை? நம்மை இந்துக்களாக கூட அவர்கள் கருதுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் அகிலேஷ் யாதவ்  வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அகிலேஷ் யாதவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, விரக்தியின் உச்சத்தில் அகிலேஷ் யாதவ் இவ்வாறு பேசியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.