Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

கணவன் படுகொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்


இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்கத்தை சேர்ந்தவர் விவேக் பிரசாத், இவர் மனைவி ஜெயந்தி, தொழிலதிபரான விவேக் கடந்த ஒரு வருடமாக புதுச்சேரியில் தங்கியிருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 1ஆம் திகதி தனது கணவரை காணவில்லை என ஜெயந்தி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், விவேக் பணிபுரியும் குடிநீர் சுத்தரிப்பு நிலையத்தில் அவர் சடலமாக புதைக்கப்பட்டுள்ளதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
மேலும், விவேக்கின் உதவியாளர் பாபு தலைமறைவானதை உறுதி செய்த பொலிசார் அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது, விவேக்கின் மனைவி ஜெயந்திக்கும், பாபுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதையறிந்த விவேக் கண்டித்துள்ளார், இதையடுத்து விவேக்கை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த பாபுவும், ஜெயந்தியும் அதன்படி அவரை கொலை செய்துள்ளனர்.
பின்னர் விவேக்கின் சடலத்தை குடிநீர் நிலையத்தில் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.