May 17, 2017
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்! - சோனியா, மம்தா ஆலோசனை
ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்துவதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஜனாதிபதி தேர்தல், வரும் ஜூலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அதிக பலத்தோடு இருக்கும் பா.ஜ.க-வுக்கு கடும் போட்டியை அளிக்கும் வகையில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, பல்வேறு கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, மம்தா பானர்ஜியுடன் சோனியா ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புக்குப் பின், மம்தா பானர்ஜி, 'ஜனாதிபதி தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் விரும்பினால் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளி, அணி சேரத் தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்! - சோனியா, மம்தா ஆலோசனை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 17, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.