May 3, 2017
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பிடிவாரன்ட்! நீதிபதி கர்ணன் அதிரடி
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேரில் வந்து விளக்கம் அளிக்க உச்ச நிதிமன்றம் உத்தரவிட்டது. ஆஜராகாத கர்ணன் மீது உச்ச நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, கொல்கத்தா நிதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை ஆஜராக சொல்லி கர்ணன் உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே, கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் மனநல மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என பதில் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி கர்ணன். இந்நிலையில், கொல்கத்தா நீதிமன்றத்தில் நிதிபதிகள் ஆஜராகததால், 7 பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி கர்ணன். மேலும், இவர்களது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ள கர்ணன், 7 நீதிபதிகளுக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பிடிவாரன்ட்! நீதிபதி கர்ணன் அதிரடி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.