ஞானசாரரை வீதியில் இறக்கி எங்களை வீடுகளுக்குள் முடக்க கனவு காணவேண்டாம். ஞானசார தேரர் போன்றவர்களை ஏவி முஸ்லிம்களை அச்சுறுத்தி எமது உரிமைகளை பறிக்கும் எண்ணம் நல்லாட்சிக்கு இருக்குமாக இருந்தால் அது பகல் கனவாகவே இருக்கும் என பானந்துறை பிரதேச சபை முன்னாள்தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நெலும்மாவத்தையில் இடம்பெற்ற கூட்டு எதிரணி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
ஒரு பயங்கரவாத அமைப்பு எவ்வாறு செயற்படுமோ அது போன்று பொது பல சேனா அமைப்பும் அதன் தலைவர்எவ்வாறு செயற்படுவாரோ அது போன்று ஞானசார தேரரும் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர்.
ஞானசார தேரரின்பேச்சு அளுத்கமை கலவரத்துக்கே காரணமாகியிருந்தது. மீண்டும் அது போன்ற ஒரு நிகழ்வை ஏற்படுத்தஎன்னவெல்லாம் பேச வேண்டுமோ அத்தனையும் பேசி வருகிறார்.
அண்மையில் பொலநறுவைக்கு விஜயம் செய்திருந்த ஞானசார தேரர் தாங்கள் உத்தியோக பூர்வமற்ற பாதுகாப்புபிரிவாக செயற்படப் போகிறோம் என்ற அறிவிப்பை விடுத்திருந்தார். ஒரு நாட்டில் உத்தியோக பூர்வமற்ற பாதுகாப்புபிரிவாக யாருமே செயற்பட முடியாது.
அதற்கு இலங்கை அரசியலமைப்பில் எந்த இடமுமில்லை.அவ்வாறானஅமைப்புக்களை தான் பயங்கரவாத அமைப்பு என்று அழைப்பர்.இந்த விடயங்களை அரசாங்கம்பார்த்துக்கொண்டுள்ளதுடன் மௌனம் காக்கிறது.
முஸ்லிம்களுக்கு பாதகமான புதிய அரசியலமைப்புஇ வடக்கு கிழக்கு இணைப்பு விவாக விவாகரத்து சட்டம் என முஸ்லிம்களுக்கு பாதகமான பல விடயங்கள் எம்முன்னாள் உள்ளன. ஜீ எஸ் பி பிளஸ் போன்றவைக்காக எமது கலாசாரத்தை அடகு வைக்க வேண்டும்.
இவைகளால் எமக்கு பாதகம் ஏற்படும் என்றநிலை வந்தால் நாம் வீதியில் இறங்கி போராடுவோம்.அரசுக்கு எதிராகபோர்கொடி தூக்குவோம். இவைகளை இல்லாமல் செய்து முஸ்லிம்களை வீட்டுக்குள் முடக்குவதற்கு இந்த அரசாங்கம் திட்டம் போடுகிறதா என்றே எமக்கு எண்ண தோன்றுகிறது.
அவ்வாறு இல்லாவிட்டால் ஞானசார தேரரை இவ்வாறு தெற்கில் இருந்து கிழக்குக்கும் வடக்குக்கும் அலையவிடத்தேவை இல்லை. அவரின் அடாவடிகளை அடக்காமல் இருக்க வேண்டிய தேவை இல்லை.
ஞானசார போன்றவர்களை வீதியில் இறக்கி முஸ்லிம்களை அச்சத்துக்குள்ளாக்கி முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் திட்டம் இருந்தால் நாமும்வீதியில் இறங்கி போராட தயங்க மாட்டோம் என அனைவருக்கும் சொல்லிவைக்க விரும்புகிறோம் என குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.