Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2017

தலித் வீட்டுச் சாப்பாட்டை ஒதுக்கிய பாஜக எதியூரப்பா- போலீசில் தீண்டாமை புகார்!


தலித் வீட்டில் சாப்பிடாமல் ஹோட்டலில் இருந்து வாங்கிவந்த உணவை முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா சாப்பிட்டார் என்று புகார் எழுந்துள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் அம்மாநில பா.ஜ.க. தலைவருமான எதியூரப்பா மீது தீண்டாமை புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசில் தலித் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் அம்மனுவில், ' சித்ரதுர்கா மாவட்டம் கேலகோடே பகுதியில் உள்ள ஒரு தலித் குடும்பத்திற்கு எதியூரப்பா வருகை தந்திருந்தார். அப்போது ஊடகங்கள் முன்னிலையில் தலித் குடும்பத்துடன் மதிய உணவு சாப்பிட்டார்.

ஆனால், எதியூரப்பா உண்ட உணவு தலித் குடும்பத்தினரால் தயார் செய்யப்பட்டது அல்ல. ஹோட்டலில் இருந்து வாங்கி வந்தது. பா.ஜ.க. தலைவரின் இந்தச் செயல், சமூகத்திற்கு தவறான முன் உதாரணத்தை உருவாக்கிவிடும் ' என்று குறிப்பிட்டுள்ளார்.

எதியூரப்பா மீதான இந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அவரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், எதியூரப்பா மீதான குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் காரணமாக எழுந்துள்ளது என்று கர்நாடக பா.ஜ.கவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.