Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 28, 2017

மாமல்லபுரம் கார் தீ பிடித்து எரிந்த விபத்தில் இறந்தவர்கள் அடையாளம் தெரிந்தது!


மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில் திடீரென தீ பிடித்தது. இதில் காரில் இருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர்.

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அடுத்த மணமை என்ற இடத்தில் கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரில் தீ பிடித்து எரிந்தது. அப்போது காரில் இருந்த 3 பேரும் வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கிக் கொண்டார்.

மணமை கிராம மக்கள் தீயை அணைக்க முயன்றனர். காரில் இருந்த நபர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து கார் கொளுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் திருக்கழுக்குன்றம் தீ அணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த காருக்கு யாராவது தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவால் தீப்பற்றியதா என்பது குறித்து சதுரங்கபட்டினம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மூவரும் குரோம்பேட்டையை சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் சென்னை குரோம்பேட்டை நேரு நகரைச் சேர்ந்த ஜெயதேவன், ரமாதேவி தம்பதி, அவர்களது மகள் என்பது தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.