Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2017

விஜய் ரசிகர் மன்றத் தலைவரிடமிருந்து காப்பாற்றுங்கள்: மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்த கொடூரம்!


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக உள்ளார் பில்லா ஜெகன்.
திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராகவும் பில்லா ஜெகன் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
பில்லா ஜெகனின் முதல் மனைவியின் மகள் திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவருகிறார்.

இந்நிலையில், பில்லா ஜெகனின் மகளுக்கும் மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞருக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதல் விவகாரம் பில்லா ஜெகனுக்கு தெரியவந்ததால், சச்சினை அழைத்துப்பேசிய அவர், நல்ல வேலைக்குச் சென்றால் தனது மகளை திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார்.
இதனால் சச்சின் வெளிநாடுக்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவரைத் தொடர்பு கொண்ட பில்லா ஜெகனின் மகள், தனது தந்தை வேறு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் தன்னை வந்து அழைத்துச் செல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார். இந்த விவரங்களை சச்சினின் உறவினர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியுள்ளார் சச்சின். அதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் சச்சின் உடன் தனது மகள் நின்று பேசிக்கொண்டிருந்ததை கண்ட பில்லா ஜெகன், தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின் சச்சின் மீது பில்லா ஜெகன் தன் மகளை காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்வதாக கூறி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் சச்சினைத் தேடி அவரது வீட்டுக்கு அடியாட்களை அனுப்பியுள்ளார் பில்லா ஜெகன். சச்சின் அங்கு இல்லாததால், அவரை தேடியுள்ளனர் அப்போது தூத்துகுடியில் உள்ள குறித்த இடத்தில் சச்சினை பார்த்துள்ளனர்.
இதையடுத்து சச்சினை கடத்தி அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சச்சினை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த அடியாட்கள் அவரது மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் உடலை வீசிச்சென்றுள்ளனர். வேதனையின் தவித்துவரும் சச்சினின் உறவினர்கள் பில்லா ஜெகன் கும்பலிடம் இருந்து தங்களை காக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.